Samayal Tube : Drumstick Soup Recipe | Murungakkai Soup Recipe I Puthuyugam Recipe

Samayal Tube :




Learn how to make Healthy and Tasty Drumstick Soup Recipe..
முருங்கைக்காய் சூப்:
தேவையான பொருட்கள்: முருங்கைக்காய், கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், கேரட், வெண்ணெய், மிளகு தூள், துவரம்பருப்பு, கரம்மசாலா பொருட்கள், பெருங்காயத்தூள், உப்பு.
செய்முறை:
1. முதலில் அடுப்பில் குக்கரை வைத்து வெண்ணெய் சேர்த்து அதனுடன் பிரியாணி இலை, பட்டை, கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் சேர்த்து வதக்க வேண்டும்.
2. பின்பு அதனுடன் துவரம் பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
3. பின்பு அதனுடன் முருங்கைக்காய் சேர்த்து குக்கரை மூடி 2விசில் விட்டு வேக வைக்க வேண்டும்.
4. பின்பு மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து முருங்கைக்காய் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
5. பின்பு குக்கரை திறந்து அதில் உள்ள முருங்கைக்காயை தனியாக எடுத்து, பின்பு கலவையை தனியாக வடிக்கட்டி அந்த நீரை மட்டும் வாணலியில் வேக வைத்து கொண்டிருக்கும் முருங்கைக்காயுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
6. பின்பு வேக வைத்த முருங்கைக்காயின் சதை பகுதியை எடுத்து அதையும் கொதிக்கும் கலவையுடன் சேர்த்து பின்பு கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
7. இறுதியாக மிளகு தூள் தூவி பரிமாறினால் சுவையான முருங்கைக்காய் சூப் தயார்.

SUBSCRIBE US |

Click Here to Watch More |

Natchathira Jannal |

Rusikkalam Vanga |

Alayangal Arputhangal |

Anmeega Thagaval |

First Frame |



Connect With Us:

,murungai keerai recipes,murungai keerai recipes in tamil,murungai keerai recipes youtube,murungai keerai recipes padhuskitchen,murungai keerai recipes for toddlers,murungai keerai recipes rak's,

Comments